(Photo:wikipedia.org)
ஜெர்மனியில் நாளை (26) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரசாரத்திற்கான இறுதித் தினமான இன்று, அங்கு பிரசார நடவடிக்கைகள் வலுவடைந்துள்ளன.
பதவியிலிருந்து நீங்கிச் செல்லும் பிரதமர் அங்கெலா மேர்க்கெலின் வலதுசாரி CDU கட்சியும், சமூக ஜனநாயகக் கட்சியும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகளில் முன்னெடுத்து வருகின்றன.
வழமைக்கு மாறாக குறித்த இரு பிரதான கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.
அங்கெலா மேர்க்கெல், தமது கட்சியின் சார்பில் பிரதமர் பதவிக்காக போட்டியிடும் அர்மின் லாஷெட்டுவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை தேர்தலுக்கான பிரசாரத்தை முன்னெடுக்க போவதில்லை என மேர்க்கெல் உறுதியளித்துள்ளார்.
அங்கெலா மேர்க்கெல், 16 ஆண்டுகளாக ஜெர்மனியின் பிரதமராக பதவி வகித்தார்.
காலநிலை மாற்றம் உட்பட பல பிரச்சினைகள் நாட்டு மக்களின் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. பல்லாயிரக்கணக்கான இளம் ஆர்வலர்கள் புவி வெப்பமடைதலை சமாளிக்க அதிக நடவடிக்கை எடுக்கக் கோரி நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் காலநிலை மாற்றம் ஒரு முக்கிய கருப்பொருளாக இருந்தது வருகின்றது.
இதனிடையே, சமூக ஜனநாயகக் கட்சி, அங்கெலா மேர்க்கெலின் CDU கட்சியை விடவும் முன்னிலை வகிப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.