November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவில் 511,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து;விஞ்ஞானிகள் எச்சரிக்கை

அமெரிக்காவில் எதிர்வரும் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த பெப்ரவரி மாத இறுதிக்குள் 511.000 பேர் உயிரிழக்கும் ஆபத்துள்ளதாக வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது;

எதிர்வரும் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் அமெரிக்காவின் பல மாநிலங்களில் மிகவேகமாக பரவலாம். இதன் காரணமாக 511,000 பேர் உயிரிழக்கலாம்.
அமெரிக்காவில் மூன்றாவது கொரோனா வைரஸ் அலை போல தோன்றும் பாதிப்புகளால் அடுத்த மூன்று- நான்கு மாதங்களில் 300,000 உயிரிழப்புகள் இடம்பெறும்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தினால் நிலைமை இன்னமும் மோசமானதாக மாறலாம்.

அமெரிக்காவில் மாநிலங்கள் கட்டுப்பாடுகளை
தளர்த்தினால் பெப்ரவரி 28 ம் திகதிக்குள் ஒரு மில்லியனிற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பார்கள்
.
பெப்ரவரிக்கு பின்னரும் அமெரிக்கா தொடர்ந்தும் பொது சுகாதார சவால்களை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.