July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குறியீட்டு நாணய பரிமாற்றங்களை சட்ட விரோதமானதாக பிரகடனப்படுத்தியது சீனா

குறியீட்டு நாணய (crypto-currency) பரிமாற்றங்களை சட்ட வீரோதமானது என்று சீனா பிரகடனப்படுத்தியுள்ளது.

சீனாவின் மத்திய வங்கி மேற்படி நாணயப் பரிமாற்றங்களை சட்டவிரோதமானதாக பிரகடனப்படுத்தியுள்ளது.

வர்த்தக கொடுக்கல் வாங்கலின் போது மெய்நிகர் அல்லது குறியீட்டு நாணய பரிமாற்றங்கள் சட்ட விரோதமான நிதிச் செயற்பாடுகள் ஆகும் என்று சீன மத்திய வங்கி அறிவித்துள்ளது.

உலகின் மிகப் பெரும் குறியீட்டு நாணய சந்தையாக சீனா விளங்கியது. 4

சீனாவின் அறிவிப்பைத் தொடர்ந்து பிட்கொய்ன், பைனேன்ஸ் போன்ற குறியீட்டு நாணயங்களின் (crypto-currency) பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த தடை, குறியீட்டு நாணயங்களின் விலையில் மேலும் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.