வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் உலகில் 7 மில்லியன் பேர் மரணமடைவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
வளி மாசடைதலின் தீங்குகள் நினைத்ததைவிட அதிகமாகி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
வளி மாசடைதலால் புகைபிடித்தல் அல்லது பாதுகாப்பற்ற உணவு உட்கொள்ளலுக்கு சமமான நோய் நிலைகள் ஏற்படுவதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
வளி மாசடைதலால் குறைந்த மற்றும் மத்திய அளவு வருமானம் பெறும் நாடுகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எரிபொருள் பாவனை வளி மாசடைதலின் பிரதான காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.