
அமெரிக்காவில் வயோதிபர்களுக்கு பைசர் மற்றும் பயோன்டெக் பூஸ்டர் டோஸ்களை வழங்குவதை அந்நாட்டு உணவு மற்றும் மருந்து ஒழுங்குபடுத்தல் நிறுவனம் அனுமதித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களுக்கே இவ்வாறு பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்படவுள்ளன.
பல்வேறு கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள வயோதிபர்களும் இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டத்தில் உள்ளடங்குகின்றனர்.
மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு இந்த வாரம் முதல் பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்படவுள்ளன.
சுகாதார முன்களப் பணியாளர்கள், ஆசிரியர்கள், பாதுகாப்புத் துறையினர் போன்றவர்களுக்கும் பூஸ்டர் டோஸ்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.