January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘உலக நெருக்கடியிலும் கோடீஸ்வரர்கள் விண்வெளி பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர்’: ஐநா பொதுச் செயலாளர் கவலை

உலகம் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையிலும் முன்னணி கோடீஸ்வரர்கள் விண்வெளி பந்தயத்தில் ஈடுபட்டு வருவதாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

ஐநா பொதுச் சபையின் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து, உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உலக மக்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும், மக்கள் உணவுக்காகப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மில்லியன் கணக்கான மக்கள் உணவுக்காகப் போராடும் நிலையில், உலகின் முன்னணி கோடீஸ்வரர்கள் விண்வெளி பயணங்களில் குதூகளிப்பதாகவும் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி செல்வந்தர்கள் தமது ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காது, விண்வெளி பயணங்களில் பணத்தை செலவழிப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.