photo: Twitter/ @LastQuake
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
தென் கிழக்கு அவுஸ்திரேலியாவில் நேற்று இரவு 5.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பாதிவாகியுள்ளது.
“எவ்வித கடுமையான பாதிப்புகளும் இல்லாமை நல்ல செய்தியாகும்” என்று அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
தென் அவுஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளிலும் 4.0 மற்றும் 3.1 என்ற ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தாலும், காயமடைந்தவர்கள் மற்றும் உயிர்ச் சேதங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
அவுஸ்திரேலியாவில் நீண்ட காலத்துக்கு பின்னர் இவ்வாறான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.