முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐநா பொதுச் சபையின் கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“எமது உலகத்துக்கு இது ஒரு தீர்க்கமான தசாப்தமாக இருந்தாலும்” அனைத்து நாடுகளுடனும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று பைடன் தெரிவித்துள்ளார்.
தமது சொந்த வெற்றி ஏனைய நாடுகளின் வெற்றியுடன் பிணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா எந்தவொரு நாட்டுடனும் புதிய பனிப்போரை அல்லது உலகப் பிரிவினையை எதிர்பார்ப்பதில்லை என்று ஐநாவில் உரையாற்றும் போது, அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா தன்னையும், தன் கூட்டு நாடுகளையும் பொது நலன்களையும் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதில் தீவிரமாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.