January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராணுவப் புரட்சிக்கு முயற்சித்த அதிகாரிகளை கைது செய்தது சூடான் அரசாங்கம்

நாட்டில் இராணுவப் புரட்சி ஒன்றை ஏற்படுத்த முயற்சித்த இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக சூடான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சூடானின் இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இராணுவப் புரட்சியை ஏற்படுத்த முயற்சித்த 40 இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அரச ஊடகங்கள் மற்றும் இராணுவ கட்டளைத் தலைமையகங்களைக் கைப்பற்ற முயற்சித்துள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சூடானின் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.