May 29, 2025 23:06:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கனேடிய பொதுத் தேர்தல்; ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது

கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திடீர் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், நேற்று கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

பிரகாசமான எதிர்காலம் ஒன்றைத் தெரிவு செய்த மக்களுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நன்றி தெரிவித்துள்ளதோடு, கொவிட்- 19 க்கு எதிரான போராட்டத்தை முடிப்பதாக அறிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளதோடு, ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் மின்னஞ்சல் மூலமாக வாக்களித்துள்ளனர்.

610 மில்லியன் கனேடிய டொலர் செலவில் இம்முறை தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ட்ரூடோவுக்கு சவால் விடுப்பதற்காக தான் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவதாக கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் எரின் ஓடூல் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு தேர்தலில் லிபரல் கட்சி பெற்றுக்கொண்ட ஆசனங்களில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.