முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட வெளிநாட்டு பயணிகள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
சீனா, இந்தியா, பிரேஸில் உட்பட 33 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மீதான பயணக் கட்டுப்பாடுகள் நவம்பர் மாதத்துடன் தளர்த்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த வருடம் முதல் வெளிநாட்டுப் பயணிகள் மீதான பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா கடைபிடித்து வந்தது.
அமெரிக்காவின் பயணக் கட்டுப்பாடுகள் பல்வேறு நாடுகளினதும் வர்த்தக மற்றும் ஏனைய தொடர்புகளைப் பாதித்து இருந்தன.
இந்நிலையில், அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை பல்வேறு நாடுகளும் வரவேற்றுள்ளன.
அமெரிக்காவுடன் நிலத் தொடர்புள்ள கனடா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்கள் மீதான தடை ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.