May 28, 2025 15:48:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஷ்யாவின் பேர்ம் பல்கலைக்கழக துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் பலி!

ரஷ்யாவின் பேர்ம் பல்கலைக்கழகத்தில் ஆயுததாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஆறு பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

ஆயுததாரி இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தினுள் சென்று துப்பாக்கி சூட்டை ஆரம்பித்துள்ளார்.

துப்பாக்கி சூட்டில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக மாணவர்களும் விரிவுரையாளர்களும் தங்களை கட்டடங்களுக்குள் அடைத்துக் கொண்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு மேற்கொண்டவரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

ஆயுததாரி ஒரு மாணவன் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 20 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.