ரஷ்ய பாராளுமன்ற தேர்தல் நேற்று நிறைவடைந்த நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சி வாக்களிப்பு நிறைவடைந்து சில மணி நேரங்களில் வெற்றியை அறிவித்துள்ளது.
வாக்களிப்பில் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையிலும், ஐக்கிய ரஷ்யா கட்சி வெற்றி வாய்ப்பை உறுதி செய்துள்ளதாக தெரியவருகிறது.
வாக்குப் பதிவு செய்தலில் ‘கட்டாய வாக்களிப்பு’ தொடர்பாக அதிக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், வாக்களிப்பில் மோசடி இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
80 வீதமான வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சி 50 வீத வாக்குகளையும் கொம்யூனிஸ்ட் கட்சி 20 வீத வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.
450 ஆசனங்கள் கொண்ட ரஷ்ய பாராளுமன்றத்தில் 300 க்கு மேற்பட்ட ஆசனங்களை தாம் கைப்பற்றுவதாக புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சி தெரிவித்துள்ளது.