January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறையில் இருந்து தப்பியோடிய மேலும் இரு பலஸ்தீனர்களை மடக்கிப் பிடித்தது இஸ்ரேல்!

இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பியோடிய மேலும் 2 பலஸ்தீனர்களை அந்நாட்டு இராணுவம் கைது செய்துள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு வடக்கு இஸ்ரேலின் ஜில்போவா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 பலஸ்தீனியர்கள் தப்பியோடி இருந்தனர்.

இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்கு சொந்தமான 6 தீவிரவாதிகளே, தப்பிச் சென்றிருந்ததாக இஸ்ரேல் அறிவித்திருந்தது.

இஸ்ரேலிய பொலிஸாரும் இராணுவத்தினரும் மேற்கொண்ட தேடும் பணியில் இருவர் வாகன தரிப்பிடம் ஒன்றில் இருந்தும் அடுத்த இருவர் நஸ்ரத் நகரில் இருந்தும் ஒரு வாரத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தப்பியோடிய மேலும் இருவரை தேடும் பணிகளை இஸ்ரேலிய பொலிஸாரும் இராணுவத்தினரும் தீவிரப்படுத்தியிருந்தனர்.

இஸ்லாமிய ஜிஹாத் தீவிரவாத அமைப்பை சேர்ந்த இந்த இருவரும் மேற்கு கரை நகரமான ஜெனினில் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.