January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டன், அமெரிக்கா, அவுஸ்திரேலியாவின் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு பிரான்ஸ் எதிர்ப்பு

பிரிட்டன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் மேற்கொண்ட கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு பிரான்ஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கான தூதுவர்களை நாட்டுக்கு அழைக்க பிரான்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு ஒப்பந்தமாக இது கருதப்படுகிறது.

இந்த கூட்டு ஒப்பந்தம் அமெரிக்காவின் தொழில்நுட்ப உதவியுடன் அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க அவுஸ்திரேலியாவுக்கு அனுமதியளிக்கிறது.

இந்த கூட்டு ஒப்பந்தம் கூட்டு நாடுகளுக்கு இடையே ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையாகும் என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த மூன்று நாடுகளுடனும் பிரான்ஸ் பலமான இராணுவ ஒத்துழைப்பைப் பேணி வரும் நிலையில், கூட்டு ஒப்பந்தத்தில் கைவிடப்பட்டுள்ளமை பிரான்ஸின் எதிர்ப்புக்குக் காரணமாகும்.