பிரிட்டன், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை அறிவித்துள்ளன.
ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு ஒப்பந்தமாக இது கருதப்படுகிறது.
இந்த கூட்டு ஒப்பந்தம் அமெரிக்காவின் தொழில்நுட்ப உதவியுடன் அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க அவுஸ்திரேலியாவுக்கு அனுமதியளிக்கிறது.
அண்மைய தசாப்தங்களில் நாடுகளுக்கு இடையேயான மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தமாக, இது கருதப்படுகிறது.
இந்த கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை “பனிப்போர் மனநிலை மற்றும் கருத்தியல் ரீதியான தப்பெண்ணம்” என்று அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் சாடியுள்ளது.
அண்மைக் காலமாக சீனாவின் ஆயுத பலம் மற்றும் ஆதிக்கம் குறித்து மேற்கு நாடுகள் கவலை வெளியிட்டு வருகின்றன.
The UK, Australia and US are natural allies, and our new partnership will become increasingly vital for defending our interests around the world and protecting our people back at home.
🇦🇺 🇬🇧 🇺🇸#AUKUS pic.twitter.com/7aV8PEKHlU
— UK Prime Minister (@10DowningStreet) September 15, 2021