
வட கொரியாவின் தொலைதூர தாக்குதிறன் கொண்ட ஏவுகணை பரிசோதனையைத் தொடர்ந்து தென் கொரியாவும் ஏவுகணைகளைப் பரிசோதனை செய்துள்ளது.
இரு நாடுகளினதும் ஏவுகணை பரிசோதனைகளால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமை வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனையைத் தொடர்ந்து, இன்று தென் கொரியா முதன் முதலாக கடலுக்குக் கீழான தொலைதூர ஏவுகணையைப் பரிசோதித்துள்ளது.
தமது வெளியக அச்சுறுத்தல்களைத் தடுக்கவும், தற்காப்பு நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்திக்கொள்ள தாம் ஆயுத கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதாக தென் கொரிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை பரிசோதனை தென் கொரியாவை உலகின் அதிக தொழில்நுட்ப ஆயுதங்கள் கொண்ட ஏழாவது நாடாக உயர்த்தியுள்ளது.
நாட்டில் உணவுத் தட்டுப்பாடு நிலவினாலும், புதிய ஆயுதங்களை உருவாக்கும் திறன் தம்மிடம் காணப்படுவதாக வட கொரியா தெரிவித்துள்ளது.