January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தாலிபான் தலைவர்களுக்கு இடையே அதிகார முரண்பாடு

ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தாலிபான் அமைப்பின் தலைவர்களுக்கு இடையே அதிகார முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்து சில நாட்களிலேயே தாலிபான் தலைவர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காபூலில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் தாலிபான்களின் இரண்டு குழுக்களிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அமெரிக்க படையினருக்கு எதிரான போரில் அதிகமாகப் பங்களிப்பு செய்தது யார் மற்றும் புதிய அமைச்சரவையில் எவ்வாறு அதிகாரங்களைப் பிரித்துக்கொள்வது போன்ற விடயங்களில் முரண்பாடு தோன்றியுள்ளது.

தமக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை தாலிபான்கள் மறுத்துள்ளனர்.

கடந்த வாரம் முதல் தாலிபான்களுக்கு இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதை கட்டாரில் உள்ள தாலிபான் சிரேஷ்ட தலைவர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.