November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க தேர்தலில் தலையிடுவதற்கு ஈரான், ரஷ்யா முயற்சி- புலனாய்வு அமைப்புகள் தகவல்

2020 ஜனாதிபதி தேர்தலில் தலையிடுவதற்கு ரஷ்யாவும் முயன்றது என அமெரிக்க புலனாய்வு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

வாக்காளர் பதிவுகள் குறித்த ஆவணங்களை ஈரானும் ரஷ்யாவும் தனித்தனியாக பெற்றுக்கொண்டன என தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் வாக்காளர்களை அச்சுறுத்துவதற்காக போலியான மின்னஞ்சல்களை அனுப்பியது.அமைப்புகள் சமூக அமைதியின்மையை ஏற்படுத்தி அமெரிக்க ஜனாதிபதிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

டிரம்பின் ஆதரவாளர்களான வலதுசாரி அமைப்புகளிடமிருந்து அனுப்பப்பட்டது போன்ற மின்னஞ்சல்களை ஈரான் அனுப்பியுள்ளது.
புதன்கிழமை இவ்வாறானதொரு மின்னஞ்சல் வெளியாகியுள்ளது
.
அமெரிக்க தேர்தலிற்கு இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் புலனாய்வு அமைப்புகள் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளமை, தேர்தலின் நேர்மை குறித்த அமெரிக்க மக்களின் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் வெளிநாடுகள் செயற்பட்டு வருகின்றமை குறித்து அமெரிக்க அதிகாரிகள் மத்தியில் காணப்படும் அச்சத்தினை வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி போலியான தகவல்களை பரப்பி தேர்தல் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்த ஈரான், ரஷ்யா போன்ற நாடுகள் முயல்கின்றன என அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.

தேர்தலில் டிரம்பிற்கு பாதிப்பை ஏற்படுத்த ஈரான் முயலக்கூடும். ரஷ்யா அவருக்கு சார்பாக செயற்படக்கூடும் என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.