July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

1500 கிலோ மீட்டர் தொலைதூர தாக்குதிறன் கொண்ட புதிய ஏவுகணையை பரிசோதித்தது வட கொரியா

வட கொரியா தொலை தூர தாக்குதிறன் கொண்ட புதிய ஏவுகணை பரிசோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

புதிய ஏவுகணையால் 1500 கிலோ மீட்டர் (930 மைல்கள்) வரையான எல்லைகளைத் தாக்கி, அழிக்க முடியும் என்று வட கொரிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி இருந்தாலும், ஆயுதங்களை உருவாக்கும் திறன் தம்மிடம் காணப்படுவதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் புதிய ஏவுகணை பரிசோதனை சர்வதேச சமூகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அயல் நாடான ஜப்பானும் இந்த பரிசோதனைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ளது.

பரிசோதனைகளின் போது புதிய ஏவுகணைகள் அவற்றின் இலக்குகளைத் தாக்கியதாக வட கொரியா தெரிவித்துள்ளது.