July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மியன்மாரில் இராணுவம் – கிளர்ச்சியாளர்கள் மோதல்: 20 பேர் பலி!

மியன்மாரில் இராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று இடம்பெற்ற மோதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியான்மரில் 2020 நவம்பரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, கடந்த பெப்ரவரி மாதம் ஆட்சியை கைப்பற்றிய அந்நாட்டு இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்தது.

இதனை தொடர்ந்து அங்கு இராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் அதற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபடுவோருக்கும், இராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் இடம்பெற்றுவரும் நிலையில், இராணுவத்தினரின் தாக்குதலில் நேற்று வரையில் 1,058 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்றைய தினத்தில் கிளர்ச்சிக் குழுவொன்றுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது இராணுவத்தினரின் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.