May 1, 2025 23:53:17

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறையில் இருந்து தப்பியோடிய ஆறு பலஸ்தீனர்களில் நால்வரை மடக்கிப் பிடித்தது இஸ்ரேல்

உயர் பாதுகாப்பு சிறையில் இருந்து தப்பியோடிய ஆறு பலஸ்தீனர்களில் நால்வரை மடக்கிப் பிடித்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

வடக்கு இஸ்ரேலின் ஜில்போவா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 பலஸ்தீனியர்கள் அண்மையில் தப்பியோடி இருந்தனர்.

சிறையில் இருந்து தப்பியோடியவர்களைத் தேடும் பணியில் இஸ்ரேலிய பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இருவர் வாகன தரிப்பிடம் ஒன்றில் இருந்தும் அடுத்த இருவர் நஸ்ரத் நகரில் இருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்குச் சொந்தமான தீவிரவாதிகளே, தப்பிச் சென்றிருந்ததாக இஸ்ரேல் அறிவித்திருந்தது.

சிறையின் கழிப்பறையில் இருந்து சுரங்கம் அமைத்து, இவர்கள் தப்பியோடி இருந்தனர்.

தப்பியோடிய மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர்.