சீன அரசாங்கம் ஆப்கானிஸ்தானுக்கு 31 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் உணவு விநியோகம் மற்றும் தடுப்பூசித் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளவே, சீனா இந்த உதவித் தொகையை வழங்கவுள்ளது.
தாலிபான் அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணுவதற்குத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் நிறுவப்பட்ட புதிய இடைக்கால அரசாங்கம், நாடு ஒழுங்குக்குத் திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கை என்றும் சீனா தெரிவித்துள்ளது.
தாலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்கும் தீர்மானத்தில் இருந்து தாம் தொலைவில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தாலிபான்களின் அரசாங்கத்தை அங்கீகரித்த நாடுகளில் சீனா முன்னணி வகிக்கிறது.
சீனா ஆப்கானிஸ்தானுக்கு 3 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.