(Photo : Twitter/Russian Embassy in Sri Lanka)
ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலைகள் அமைச்சர் யெவ்ஜெனி ஜினிகேவ், ஆர்க்டிக் பயிற்சியின் போது உயரமான குன்றிலிருந்து ஒரு மலை நதியில் விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நோரில்ஸ்கில் பகுதியில் பெரிய அளவிலான பயிற்சிகளை மேற்பார்வையிடும் பணியில் இருந்த யெவ்ஜெனி ஜினிகேவ், அலெக்சாண்டர் மெல்னிக் என்ற உதவியாளரை காப்பாற்ற முயன்ற போதே இவ்வாறு உயிரிழந்ததாக அமைச்சு அறிக்கையில் கூறியுள்ளது.
அலெக்சாண்டர் மெல்னிக், ஆர்க்டிக் மற்றும் வடக்கு கடல் பாதை பற்றி ஆவணப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது உயரமான குன்றிலிருந்து தவறி விழுந்தார்.
“யெவ்ஜெனி அலெக்சாண்டரைப் பிடிக்க முயன்றார், ஆனால் துரதிருஷ்டவசமாக, அவர்கள் இருவரும் ஒரு உயரமான குன்றிலிருந்து ஒரு மலை நதியில் விழுந்து இறந்தனர்,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜீனிசேவ் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்த 55 வயதான யெவ்ஜெனி ஜினிகேவ், 2018 முதல் ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலைகள் அமைச்சராக உள்ளார்.
1987 முதல் 2015 வரை மாநில பாதுகாப்பு சேவைகளில் யெவ்ஜெனி ஜினிகேவ் பணியாற்றினார்.
புடினுக்கான பாதுகாப்பு பணியிலும் இவர் ஈடுபட்டிருந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.