July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் புதிய அரசாங்கம் தொடர்பாக அமெரிக்கா கவலை

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் புதிய அரசாங்கம் தொடர்பாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கம் ஆண்களை மாத்திரம் உள்ளடக்கியுள்ளதோடு, அமெரிக்க படையினர் மீது தாக்குதல் நடத்தியவர்களையும் உள்ளடக்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தாலிபான்கள் நேற்று ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசாங்கத்தை அறிவித்துள்ளனர்.

இடைக்கால அமைச்சரவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முல்லா மொஹம்மட் ஹஸ்ஸான் ஐநா கறுப்புப் பட்டியலில் உள்ளவர் என்றும் சிராஜூதீன் ஹக்கானி எப்பிஐ தடைப் பட்டியலில் உள்ளவர் என்றும் தெரியவருகிறது.

தாலிபான்களின் வாக்குறுதிகளை அன்றி செயற்பாடுகளைக் கொண்டே, தாம் மதிப்பிடுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தாலிபான்கள் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக ஆப்கானிஸ்தானை பயன்படுத்தக் கூடாது என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.