
photo: twitter/ RadioSantaCruz
சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் பணியை கியுபா நேற்று ஆரம்பித்துள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அப்டலா மற்றும் சொபெரனா ஆகிய தடுப்பூசிகளை கியுபா சிறுவர்களுக்கு வழங்க ஆரம்பித்துள்ளது.
இரண்டு வயது முதல் 11 வயதுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தை கியுபா அறிமுகப்படுத்தியுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் இன்றியே, இந்த தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெற்றியளித்ததைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கு கியுபா கடந்த வாரம் வெற்றிகரமாக தடுப்பூசி வழங்கியது.
உலகின் சில நாடுகள் 12 வயது முதல் தடுப்பூசி வழங்க ஆரம்பித்துள்ள நிலையில், 2 வயது முதல் தடுப்பூசி வழங்கும் முதலாவது நாடாக கியுபா விளங்குகிறது.