கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தேர்தல் பிரசார பணியில் ஈடுபட்டிருந்த போதே, ஆர்ப்பாட்டக்காரர்கள் ட்ரூடோ மீது கல்வீசியுள்ளனர்.
கல்வீச்சில் பிரதமருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று தெரியவருகிறது.
கட்டாய தடுப்பூசி வழங்கல் மற்றும் ஏனைய கொவிட் 19 கட்டுப்பாடுகள் காரணமாக கனடாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஜஸ்டின் ட்ரூடோவின் தேர்தல் பிரசாரங்களையும் பாதித்துள்ளன.