ஹொங்ஹொங் மக்கள் தமது செல்லப் பிராணிகளை மரியாதையுடன் அடக்கம் செய்ய விரும்பும் பின்னணியில் அங்கு செல்லப் பிராணிகளுக்காக தனியான தகனசாலை அமைக்கப்பட்டுள்ளது.
செல்லப் பிராணிகளை அடக்கம் செய்வதற்கு அதிக விலையை அந்நாட்டு மக்கள் செலுத்த வேண்டி இருந்த நிலையில் இவ்வாறு தகனசாலை அமைக்கப்பட்டுள்ளது.
“செல்லப் பிராணிகளின் உடல்களை கழிவுகளுடன் சேர்ப்பதை விரும்பவில்லை. மரியாதையுடன் நடத்தவே விரும்புவதாக,” செல்லப்பிராணி உரிமையாளர் ஒருவர் ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார்.
அங்குள்ள தகன சாலைகளில் விலங்குகளின் இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.
உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளின் உடலை அதற்கான பிரத்தியேக அறையில் சேர்க்கலாம்.
பின்னர், செல்லப் பிராணிகளின் சாம்பலை பெற்று உரிமையாளர்கள் தமது விருப்பத்தின் படி வீட்டிற்கு கொண்டு வரவோ அல்லது தமது தோட்டத்தில் வைக்கவோ முடியும்.
ஹொங்ஹொங் மக்கள் தமது செல்லப் பிராணிகளை அதிகமாக நேசிக்கின்றனர். அவற்றை தமது குடும்பத்தின் ஒரு அங்கத்தவராகவே பார்க்கின்றார்கள்.
சிலர் ஒரு மனிதனை போலவே அவற்றுக்கு இறுதி சடங்குகளை நடத்த விரும்புகின்றனர்.
ஹொங்ஹொங்கில், சில தம்பதிகள் பல்வேறு காரணங்களால் குழந்தைகளை விட செல்லப் பிராணிகளை வளர்க்க விரும்புகிறார்கள்.
அங்கு பல செல்வந்த வீடுகளில் நாய்கள் அல்லது பூனைகளை பராமரிப்பதற்கான செலவு மனிதர்களை பராமரிப்பதை விடவும் அதிகம்.