இஸ்ரேலின் உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இருந்து ஆறு பலஸ்தீனியர்கள் தப்பியோடியுள்ளனர்.
வடக்கு இஸ்ரேலின் ஜில்போவா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலஸ்தீனியர்களே இவ்வாறு தப்பியோடியுள்ளனர்.
இஸ்ரேலின் பிரதமர் நப்டாலி பென்னட் இதனை மிக மோசமான சம்பவமாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் இருந்து தப்பியோடியவர்களைத் தேடும் பணியில் இஸ்ரேலிய பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்குச் சொந்தமான தீவிரவாதிகளே, இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
சிறையின் கழிப்பறையில் இருந்து சுரங்கம் அமைத்து, இவர்கள் தப்பியோடியுள்ளனர்.
இந்த தப்பியோட்டத்தை பலஸ்தீனியர்கள் பாராட்டியுள்ளனர்.