
சீனாவின் பெருமளவு ஜெட் போர் விமானங்கள் நேற்று தமது வான் பாதுகாப்பு பரப்புக்குள் பறந்ததாக தாய்வான் குற்றம்சாட்டியுள்ளது.
சீனாவின் அணு ஆயுத திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்கள் உட்பட 19 போர் விமானங்கள் தமது வான் பரப்புக்குள் வந்ததாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தமது வான் பரப்பில் சீன விமானப் படையினரின் அத்துமீறல்கள் தொடர்பாக தாய்வான் 1 வருடத்துக்கு மேலாக முறைப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
சீனா தாய்வானை தம்மில் இருந்து பிரிந்த மாநிலமாகப் பார்ப்பதோடு, தாய்வான் தம்மை ஒரு இறையாண்மையுள்ள நாடாகப் பார்க்கிறது.
தாய்வானின் குற்றச்சாட்டுக்கு சீனா இதுவரையில் பதிலளிக்கவில்லை.