July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தானின் பஞ்ஷிர் போராளிகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையில் மோதல் தீவிரம்

file photo

ஆப்கானிஸ்தானின் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் உள்ள போராளிகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், தலைநகர் காபூலுக்கு வடக்கே உள்ள பஞ்ஷிர் பள்ளத்தாக்கை கைப்பற்ற முடியாத நிலை தொடர்கிறது.

பஞ்ஷிர் பள்ளத்தாக்கை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தாலிபான்கள் அறிவித்துள்ள நிலையில், அங்கிருந்து போராடும் குழு அதனை மறுத்துள்ளது.

தாலிபான்களுடனான போர் தீவிரமடைந்துள்ளதாகவும் நிலைமை ‘கடினமாக’ இருப்பதாகவும் தாலிபான்களுக்கு எதிராக போராடும் குழுவின் தலைவர்களில் ஒருவரான அம்ருல்லா சாலிஹ் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பிலும் 100 க்கு அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் 1 இலட்சத்து 50 ஆயிரம் முதல் 2 இலட்சம் வரையான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

காபூலில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்ஷிர் பள்ளத்தாக்கு இயற்கை அரணாக இருப்பதால், படையெடுப்பு மேற்கொண்டு, வெற்றிகொள்வது சாத்தியமில்லை எனக் கருதப்படுகிறது.