ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
இதனால் இம்மாதம் நடைபெறவுள்ள கட்சித் தலைவர் தேர்தலில் தான் போட்டியிட மாட்டென் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் பிரதமராக பதவி வகித்த சின்ஷோ அபே உடல் நிலை காரணங்களால் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து 2020 செப்டம்பர் மாதம் யோஷிஹிடே சுகா பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில் இவரின் ஆட்சி தொடர்பில் அதிருப்திகள் வெளியிடப்பட்டு வருவதால் அவர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவதை தவிர்த்து தான் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று காரணமாக டோக்யோ உட்பட முக்கிய நகரங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானில் இதுவரையில் 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் ஜப்பானில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.