நியூசிலாந்தின் ஒக்லன்ட் புறநகரான நியூலினில் பகுதியிலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஆறு பேரை கத்தியால் குத்திக் காயப்படுத்திய ஒருவரை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இதன்போது அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நியூசிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீதுகத்தியால் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், உடனடியாக செயற்பட்ட பொலிஸார் அந்த நபர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி அவரை கொன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அந்த நபரின் கத்திக் குத்துக்கு இலக்கான 6 பேரில் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் பலியான நபர், ஏற்கனவே பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்த இலங்கையர் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 வருடங்களாக இந்த நபர் நியூசிலாந்தில் வசிக்கும் நிலையில், இவர் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட்டதாக பிரதமர் கூறியுள்ளார்.
இதேவேளை குறித்த நபரால் நடத்தப்பட்ட தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக கருதுவதாகவும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார்.