அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் நியூஜெர்ஸி மாநிலங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரையில் ஒன்பது பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதால் நியூயோர்க்கில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக பலரும் காணமல் போயுள்ளதாகவும் வீடுகளில் சிக்கிக்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
நியூயோர்க்கில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதோடு, அவசர தேவைகளுக்கான வாகனங்கள் மாத்திரம் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய பிரதேசங்களில் உள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்வதாக நியூயோர்க் தேசிய காலநிலை சேவை மையம் தெரிவித்துள்ளது.