ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், தலைநகர் காபூலுக்கு வடக்கே உள்ள பஞ்ஷிர் பள்ளத்தாக்கை கைப்பற்ற முடியாத நிலை தொடர்கிறது.
பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் உள்ள ஆயுதக் குழுவொன்று தாலிபான்களுக்கு எதிராக தொடர்ந்தும் போராடு வருகின்றது.
இந்நிலையில், பஞ்ஷிர் பள்ளத்தாக்கு போராளிகளுக்கு ஆயுதங்களை கைவிடுமாறு தாலிபான்களின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான ஆமிர் கான் முட்டாகி கேட்டுக்கொண்டுள்ளார்.
தாலிபான்கள் மற்றும் பஞ்ஷிர் பள்ளத்தாக்கு போராளிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
காபூலில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்ஷிர் பள்ளத்தாக்கு இயற்கை அரணாக இருப்பதால், படையெடுப்பு மேற்கொண்டு, வெற்றிகொள்வது சாத்தியமில்லை எனக் கருதப்படுகிறது.
பஞ்ஷிர் மீது தாலிபான்கள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டு, 34 தாலிபான்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானின் பதவி கவிழ்க்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா மொஹம்மதி தெரிவித்துள்ளார்.