file photo: Twitter/ U.S. Army
ஆப்கானிஸ்தானில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை தாலிபான்கள் அனுமதிக்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
ஆப்கானில் இருந்து வெளியேற விரும்பும் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தாலிபான்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு சபையில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐநா பாதுகாப்பு சபையில் தாலிபான்கள் மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு 13 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.
ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா மற்றும் ரஷ்யா தாலிபான்கள் மீதான தீர்மானத்துக்கு வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டுள்ளன.
அத்தோடு, 150 க்கு அதிகமானோர் உயிரிழப்பதற்குக் காரணமாக காபூல் விமான நிலைய தாக்குதலையும் ஐநா பாதுகாப்பு சபை கண்டித்துள்ளது.