January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவில் சிறுவர்கள் இணைய விளையாட்டுகளில் ஈடுபடும் நேரம் ஒரு மணித்தியாலமாக குறைப்பு!

சீனாவில் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு இணையத்தின் ஊடாக விளையாடுவதற்கான நேரத்தை அந்நாட்டு அரசு கட்டுப்படுத்தியுள்ளது.

இதன்படி, 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் வெள்ளி, வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் ஒரு மணி நேரம் மட்டுமே இணைய விளையாட்டில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என்று சீனாவின் வீடியோ கேம் ரெகுலேட்டர் தெரிவித்துள்ளது.

“நேஷனல் பிரஸ் அண்ட் பப்ளிகேஷன் அட்மினிஸ்ட்ரேஷன்” அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவாவிடம் இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே விளையாட்டு விளையாட அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளது.

இந்த நேரத்தில் சிறுவர்கள் வெளியில் விளையாடுவதை தடுக்கவும் கேமிங் நிறுவனங்களுக்கு அது அறிவுறுத்தியது.

இந்த மாத தொடக்கத்தில் ஒரு அரசு ஊடக நிறுவனம் இணைய விளையாட்டுகளை “ஆன்மீக அபின்” என்று முத்திரை குத்தியது.

முந்தைய விதிகளின்படி, இணைய விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கான நேரத்தை நாள் ஒன்றுக்கு 90 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தியது.விடுமுறை நாட்களில் மூன்று மணிநேரமாக அனுமதி வழங்கப்பட்டது.

இது இளைஞர்களிடையே அதிகப்படியான கேமிங் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நீண்டகால கவலையை ஏற்படுத்தியிருந்தது.

பல இளைஞர்கள் இணைய கேமிங்கிற்கு அடிமையாகிவிட்டதாகவும், அது அவர்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் ஒரு மாதத்திற்கு முன்பு  அரசு நடத்தும் பொருளாதார தகவல் நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

குறித்த கட்டுரை சீனாவின் சில பெரிய இணைய கேமிங் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

அத்தோடு அமுலுக்கு வரும் புதிய நடைமுறைகள் சிறுவர்களை கேமிங்கில் ஈடுபடுவதிலிருந்து கட்டுப்படுத்துகின்றது.

எனினும் இணைய கேமிங் விதிகளை தவிர்ப்பதற்காக சிறுவர்கள் வயது வந்தவர்களின் அடையாள அட்டையை  பயன்படுத்துகிறார்கள் என்ற அச்சமும் முன்வைக்கப்பட்டது.

இதற்கு தீர்வாக ஜூலை மாதம், சீன கேமிங் நிறுவனமான டென்சென்ட் இரவு 22:00 மணி முதல் காலை 08:00 மணி வரை சிறுவர்கள் விளையாடுவதை நிறுத்த முக அங்கீகாரத்தை அறிமுகப்படுத்தியது.