photo: twitter/ Matthieu Aikins
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினர் வெளியேறியமை அனைத்து ஆப்கானியர்களினதும் வெற்றியாகும் என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 20 வருடங்கள் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க படையினர் இன்று காலை விலகிக்கொண்டனர்.
தாலிபான்கள் காபூல் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டையும் கைப்பற்றியுள்ளதோடு, தாலிபான் தலைவர்கள் ஒன்றுகூடி, வெற்றியை அறிவித்துள்ளனர்.
வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானுடன் புதிய இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.