July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசியின் செயல்திறனை தோற்கடிக்க கூடிய புதிய கொவிட் மாறுபாடு தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிப்பு!

(file Photo)

தடுப்பூசியின் செயல்திறனை தோற்கடிக்கும் அளவிற்கு வீரியமிக்க கொவிட் வைரஸின் மாறுபாடு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்காவின் தொற்று நோய்களுக்கான தேசிய கற்கை மற்றும் குவாசுலு நட்டால் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் வைரஸ் மாறுபாடுகளில் இது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என ‘த ஜெருசலேம் போஸ்ட்’ பத்திரிகையின் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

C .1.2 என அழைக்கப்படும் இந்த கொவிட் வகை முதன் முதலில் இந்த ஆண்டு மே மாதம் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அடையாளம் காணப்பட்ட C.1 மாறுபாட்டின் ஒரு பிறழ்வு C.1.2 மாறுபாடு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது செயலில் உள்ள கொவிட் -19 வைரஸுக்கு எதிரான தடுப்பூசி மூலம் மனித உடலில் உற்பத்தி செய்யப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை வெல்லும் ஆற்றலை C.1.2 வைரஸ் வகை கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

புதிய கொவிட் திரிபானது இதுவரை இங்கிலாந்து, சீனா, கொங்கோ, மொரிஷியஸ், நியூசிலாந்து, போர்த்துக்கல் மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளதாக ‘த ஜெருசலேம் போஸ்ட்’ பத்திரிகையின் இணையப் பக்கத்தில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.