November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காபூல் விமான நிலையத்திற்கு அருகில் ரொக்கெட் தாக்குதல்!

File Photo

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு அருகில் இன்று மாலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இது ரொக்கெட் குண்டுத் தாக்குதல் என்று அங்குள்ள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமான நிலையத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில் இந்த ரொக்கெட் குண்டு விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் இது குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

அந்த தாக்குதலின் பின்னர் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று டுவிட்டரில் வெளியாகியுள்ளது.

https://twitter.com/karimi_shafi/status/1431961843074015236?s=20

இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த விமான நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற இரண்டு குண்டுத் தாக்குதல்களில் அமெரிக்க படையினர் உள்ளிட்ட குறைந்தது 170 பேர் வரையிலானோர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பினர் உரிமை கோரியிருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளதாக நேற்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை காபூலில் ஐஎஸ் அமைப்பை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் இன்று தாக்குதலொன்றை நடத்தியுள்ளதாக  அமெரிக்க அதிகாரிகளை மேற்கேள் காட்டி ரொய்ட்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி இன்று மாலை இடம்பெற்ற ரொக்கெட் தாக்குலுக்கும் அமெரிக்க படையின் தாக்குதலுக்கும் இடையே தொடர்பு உள்ளதா? என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.