May 23, 2025 11:57:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காபூல் இரட்டை குண்டுத் தாக்குதலின் பலி எண்ணிக்கை 110 ஆக அதிகரித்தது

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் நேற்று மேற்கொள்ளப்பட்ட இரட்டை குண்டுத் தாக்குதலின் பலி எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.

குண்டுத் தாக்குதலில் 13 அமெரிக்க படையினர் உயிரிழந்துள்ளதோடு, 120 பேர் காயமடைந்துள்ளனர்.

தாலிபான்களிடம் இருந்து தப்பித்து வருவோரை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு தாம் தொடர்ந்தும் உதவி வருவதாக அமெரிக்க படையினர் தெரிவித்துள்ளனர்.

குண்டுத் தாக்குதலோடு ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து விமான போக்குவரத்து பாதித்தாலும், மீண்டும் ஆப்கானில் இருந்து விமானங்கள் பறக்க ஆரம்பித்துள்ளன.

குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு பதிலடி வழங்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.