பலஸ்தீனின் காஸா பகுதி மீதான வர்த்தக கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் எல்லைப் பகுதிகளில் காஸா மக்கள் மேற்கொண்ட தொடர் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இஸ்ரேல் இதனை அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் முற்றுகையைத் தளர்த்தும்படி பலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
பலஸ்தீனியர்களின் ஆர்ப்பாட்டங்களால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, காஸா பகுதிக்கான பொருட்கள் விநியோகத்தை விரிவுபடுத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல்- காஸா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு பலஸ்தீனியர் உயிரிழந்துள்ளதோடு, இஸ்ரேலிய பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.