January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஆப்கானில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுவதை பயங்கரவாதிகளால் தடுக்க முடியாது’: அமெரிக்க ஜனாதிபதி

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுவதை பயங்கரவாதிகளால் தடுக்க முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

காபூல் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, பைடன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காபூலில் இருந்து வெளிநாட்டு மற்றும் அமெரிக்க படைகளுக்கு ஒத்துழைத்த ஆப்கானியர்களை வெளியேற்றும் திட்டத்தை முழுமையாக செயற்படுத்தி முடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 15 ஆம் திகதி தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றியது முதல் இதுவரை 1 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 30 ஆம் திகதி அமெரிக்க படையினர் வெளியேறவுள்ளதால் விமான நிலையத்தில் பரபரப்பு நிலை தொடர்கின்றது.

இந்நிலையிலேயே, விமான நிலையத்தை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட குற்றவாளிகளுக்கு தகுந்த பதிலடி வழங்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.