ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே நடந்த குண்டு தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.ஐ.எஸ்.)பொறுப்பேற்றுள்ளது.
இந்த தகவலை இஸ்லாமிய அரசின் செய்தி நிறுவனமான டெலிகிராம் சனல் வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு நடுவே இந்த தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியதாக இஸ்லாமிய அரசு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 12 அமெரிக்க வீரர்கள் மற்றும் 11 கடற்படை மருத்துவர்கள் அடங்குவதாக கூறப்படுகின்றது.
இந்த இறப்புகள் 2020 பெப்ரவரிக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பெரிய அமெரிக்க இராணுவ இழப்பு என தெரிவிக்கப்படுகிறது.