ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிறுவர்கள் உள்ளடங்களாக 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்,140 பேர் காயமடைந்தனர் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
முதலாவது குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இரண்டாவது குண்டு வெடிப்பு சம்படிமொன்றும் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அமெரிக்க படையினரும் காயமடைந்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குண்டு வெடிப்பு அபாயம் இருப்பதாக எச்சரித்திருந்த நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த நிலையில், மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு ஐரோப்பிய நாடுகள் கேட்டுக்கொண்டிருந்தன.
இந்த தாக்குதலில் 12 அமெரிக்க வீரர்கள் மற்றும் 11 கடற்படை மருத்துவர்கள் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த இறப்புகள் 2020 பெப்ரவரிக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பெரிய அமெரிக்க இராணுவ இழப்பு என தெரிவிக்கப்படுகிறது.
https://twitter.com/BarzanSadiq/status/1430893427856531465?s=20