ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்துக்கு பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் இவ்வாறான அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளன.
குறித்த நாடுகள் ஆப்கானிஸ்தானில் உள்ள தமது பிரஜைகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளன.
தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றி 10 நாட்களாகும் நிலையில், 82 ஆயிரம் பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பல்வேறு நாடுகளும் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்னர் தமது பிரஜைகளை ஆப்கானில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கும் நிலையில், பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தலும் வெளியிடப்பட்டுள்ளது.