
கொரோனா வைரஸ் தொடர்பாக தவறான தகவல் உள்ளடக்கங்களைக் கொண்ட 1 மில்லியன் வீடியோக்கள் நீக்கப்பட்டதாக யூடியுப் நிறுவனம் இன்று அறிவித்தது.
கொரோனா தொடர்பான போலி தகவல்களை கட்டுப்படுத்துவதில் யூடியுப் தோல்வியடைந்ததாக விமர்சனங்கள் மேலெழுந்த நிலையில், இவ்வாறு வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொடர்பாக நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியே வருவதால் தவறான தகவல்களை தெளிவாகக் கண்டறிவதில் சிக்கல் உள்ளதாக யூடியுப் தெரிவித்துள்ளது.
உலகத்துக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு வீடியோவையும் நீக்குவதற்கு தமது கொள்கைகள் மையம் தயாராக இருப்பதாக யூடியுப் பிரதம தயாரிப்பாளர் நீல் மொஹன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 பெப்ரவரி முதல் கொரோனா தொடர்பான தவறான தகவல்கள், போலி மருத்துவ குறிப்புகள் உள்ளடங்கிய 1 மில்லியன் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.