ஆப்கானிஸ்தானுக்கான நிதி உதவிகளை உலக வங்கி இடைநிறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு பல்வேறு திட்டங்களுக்காக வழங்கப்படும் நிதியை அவர்கள் தவறாக பயன்படுத்தலாம் என்ற காரணத்தினால் உலக வங்கி அந்த நாட்டுக்கான நிதி உதவிகளை இடைநிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் நிதி உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அதேபோன்று ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியின் 9.5 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது.
ஆப்கான் மத்திய வங்கியின் சொத்துக்கள் தாலிபான்கள் அணுகுவதைத் தடுப்பதற்காக இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.