January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க சிஐஏ பிரதானி- தாலிபான் தலைவர் காபூலில் சந்திப்பு

அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான சிஐஏயின் பிரதானி வில்லியம் பேர்ன்ஸ் மற்றும் தாலிபான் தலைவர் அப்துல் கனி பராதர் ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காபூலில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையிலேயே சிஐஏயின் பிரதானி, அப்துல் கனி பராதரைச் சந்தித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து 16 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்க படைகள் ஆப்கானில் ஆகஸ்ட் 31 ஆம் திகதியைக் கடந்தும் தங்கியிருக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், சிஐஏ பிரதானி, தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.