
ஆப்கானிஸ்தானை நோக்கி வந்த உக்ரைன் விமானம் அடையாளம் தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளதாக உக்ரைனின் பிரதி வெளியுறவு அமைச்சர் யெவ்கெனி யெனின் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்த உக்ரைனியர்களை மீட்க வந்த விமானமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பிரதி வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த விமானம் ஆப்கானிஸ்தானுக்கு அருகே இருந்து, ஈரானுக்கு கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் விமானம் ஈரானுக்கு கடத்தப்படவில்லை என்று ஈரானின் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த விமானம் ஈரானின் மஷ்ஹாட் விமான நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொண்டு, உக்ரைனின் தலைநகர் நோக்கிப் பறந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.